பொட்டி பணியான்
பொட்டி பணியான் எப்படி செய்யலாம் என்பதை இந்த காணொளியை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
பொட்டி பணியான் எப்படி செய்யலாம் என்பதை இந்த காணொளியை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
- மைதா - 1 கி
- சீனி - 1 கி
- முட்டை - 20
- பன்னீர் ( ரோஸ் வாட்டர்) - 25 மில்லி
- முந்திரி - 25 கிராம்
- பாதாம் - 50 கிராம்
- நெய் - 200 மில்லி
- எண்ணெய் - 50 மில்லி
- ஏலக்காய் - 12
- பால் - 50 மில்லி
- பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்
- உப்பு - 1/4 டீஸ்பூன்.
- பாதாமை வெண்ணீரில் ஒரு மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும்.
- பாதாமை தோல் நீக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- முந்திரி மற்றும் பாதாமை பொடிதாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
- நெய் மற்றும் எண்ணெயை ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்.
- சீனியை மிக்ஸியில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- முட்டையை மிக்ஸியில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- பாலில் ஏலக்காய் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து மிக்ஸியில் அரைத்து அதனை வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- மைதாவுடன் பேக்கிங் பவுடர் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.
- ஒரு அகலமான பாத்திரத்தில் அரைத்த முட்டை, சீனி, மைதாமாவு,பன்னீர் எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும்.
- பிறகு அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
- கடைசியாக முந்திரி , பாதாம் சேர்த்து கிளறி 4 மணி நேரம் அப்படியே மூடி வைக்கவும்.
நான்கு மணிநேரம் கழித்து அரைத்து வைத்த மாவை நன்கு கலக்கிவிட்டு பொட்டி பணியான் செய்ய ஆரம்பிக்கலாம்.
தோசைக்கல் அல்லது தவா எடுத்துக்கொள்ளவும். நெய் தடவி சூடுபடுத்தவும். சூடானதும் மிதமான தீயில் வைத்து மாவு கலவையை ஊற்றவும். பிறகு அதன் மீதும் ஓரங்களிலும் நெய் ஊற்றவும் . அடிப்பகுதி வெந்து லேசாக சிவந்ததும் திருப்பிப் போடவும். மீண்டும் அதன் மேல் நெய் தடவி மாவு ஊற்றவும். சிறிது நேரம் கழித்து அடிப்பகுதி வெந்து சிவந்ததும் திருப்பிப் போடவும். இதே போல கேக் அல்லது போட்டி பணியான் எவ்வளவு உயரம் வேண்டுமோ அந்த அளவு வரும் வரை இதேபோல திரும்பத் திரும்ப செய்யவும். தயார் ஆனதும் அதனை நன்கு ஆற வைத்து விட்டு சிறு துண்டுகளாக வெட்டி பரிமாறவும். இந்தப் பணியான் 4 முதல் 5 நாட்கள் வரை கெடாமல் இருக்கும். தண்ணீர் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். காற்று புகாத பாட்டில்களில் அடைத்து பயன்படுத்தலாம். அல்லது பிரிட்ஜில் வைத்துவிட்டு தேவைப்படும் நேரத்தில் சூடுபடுத்தி சாப்பிடலாம். இந்த அளவை வைத்து 3 கிலோ அளவுக்கு பொட்டிப் பணியாரம் தயாரிக்க முடியும்.
No comments:
Post a Comment