Sunday, June 28, 2020

பொட்டி பணியான் எப்படி செய்வது?

பொட்டி பணியான் 

பொட்டி பணியான் எப்படி செய்யலாம் என்பதை இந்த காணொளியை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.



தேவையான பொருட்கள்:




  • மைதா -  1 கி
  • சீனி - 1 கி  
  • முட்டை - 20
  • பன்னீர் ( ரோஸ் வாட்டர்) - 25 மில்லி
  • முந்திரி - 25 கிராம்  
  • பாதாம் - 50 கிராம்
  • நெய் - 200 மில்லி
  • எண்ணெய் - 50 மில்லி
  • ஏலக்காய் - 12
  • பால் - 50 மில்லி
  • பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்
  • உப்பு - 1/4 டீஸ்பூன்.
செய்முறை:
  1.  பாதாமை வெண்ணீரில் ஒரு மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும்.
  2. பாதாமை தோல் நீக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  3. முந்திரி மற்றும் பாதாமை பொடிதாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
  4. நெய் மற்றும் எண்ணெயை ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்.
  5. சீனியை மிக்ஸியில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  6. முட்டையை மிக்ஸியில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும். 
  7. பாலில் ஏலக்காய் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து மிக்ஸியில் அரைத்து அதனை வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  8. மைதாவுடன் பேக்கிங் பவுடர் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.
  9. ஒரு அகலமான பாத்திரத்தில் அரைத்த முட்டை, சீனி, மைதாமாவு,பன்னீர் எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும்.
  10. பிறகு அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். 
  11. கடைசியாக முந்திரி , பாதாம் சேர்த்து கிளறி 4 மணி நேரம் அப்படியே மூடி வைக்கவும்.
நான்கு மணிநேரம் கழித்து அரைத்து வைத்த மாவை நன்கு கலக்கிவிட்டு பொட்டி பணியான் செய்ய ஆரம்பிக்கலாம்.



தோசைக்கல் அல்லது தவா எடுத்துக்கொள்ளவும். நெய் தடவி சூடுபடுத்தவும். சூடானதும் மிதமான தீயில் வைத்து மாவு கலவையை ஊற்றவும். பிறகு அதன் மீதும் ஓரங்களிலும் நெய் ஊற்றவும் . அடிப்பகுதி வெந்து லேசாக சிவந்ததும் திருப்பிப் போடவும். மீண்டும் அதன் மேல் நெய் தடவி மாவு ஊற்றவும். சிறிது நேரம் கழித்து அடிப்பகுதி வெந்து சிவந்ததும் திருப்பிப் போடவும். இதே போல கேக் அல்லது போட்டி பணியான் எவ்வளவு உயரம் வேண்டுமோ அந்த அளவு வரும் வரை இதேபோல திரும்பத் திரும்ப செய்யவும். தயார் ஆனதும் அதனை நன்கு ஆற வைத்து விட்டு சிறு துண்டுகளாக வெட்டி பரிமாறவும். இந்தப் பணியான் 4 முதல் 5 நாட்கள் வரை கெடாமல் இருக்கும். தண்ணீர் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். காற்று புகாத பாட்டில்களில் அடைத்து பயன்படுத்தலாம். அல்லது பிரிட்ஜில் வைத்துவிட்டு தேவைப்படும் நேரத்தில் சூடுபடுத்தி சாப்பிடலாம். இந்த அளவை வைத்து 3 கிலோ அளவுக்கு பொட்டிப் பணியாரம் தயாரிக்க முடியும். 


Tuesday, May 19, 2020

மாலை நேரத்தில் சுலபமாக செய்யக்கூடிய சிற்றுண்டிகள்

மாலை நேரத்தில் சுலபமாக செய்யக்கூடிய சிற்றுண்டிகள்:
1)மங்களூர் போண்டா

 தேவையான பொருள்கள்: 

* மைதா - 4 கப்
 * தயிர் - 4 டீ ஸ்பூன்
 * பச்சை மிளகாய் - 4
* பேக்கிங் பவுடர் - 1/2 டீ ஸ்பூன்
 * நெய் - தேவையான அளவு
 * எண்ணெய் - தேவையான அளவு
 * உப்பு - தேவையான அளவு
 * பெருங்காயம் - தேவையான அளவு
* கருவேப்பிலை - தேவையான அளவு

Kitchen items to buy !!

 செய்முறை:

 * மைதா மாவுடன் தயிர், நெய்யைக் கலந்து பிசையவும். தேவையான அளவு உப்பு, பெருங்காயம், பேக்கிங் பவுடர் சேர்த்துக்கொள்ளலாம், கருவேப்பிலையையும் கிள்ளிப் போடலாம்
 * இந்த மாவு நன்கு குழைந்து பஜ்ஜி போடுவதுபோன்ற பதத்தில் வரவேண்டும்
 * அடுப்பில் ஓர் அகலமான பாத்திரத்தை வைத்து அதில் எண்ணெயை ஊற்றிக் கொதிக்கவிடவும்
 * எண்ணெய் கொதித்ததும் நாம் கரைத்துவைத்த மாவைச் சிறு உருண்டைகளாகச் செய்து அதில் போடவும்
 * போண்டாவை நன்கு திருப்பிவிட்டுப் பொறிக்கவைக்கவேண்டும். நன்கு பொன்னிறமாகச் சிவந்து வரும்போது எடுத்துவிடலாம்
*மங்களூர் போண்டாவைச் சூடாகச் சாப்பிட்டால் சுவை பிரமாதமாக இருக்கும். இதனுடன் காரச் சட்னியைக் கூட்டணி சேர்த்து அசத்துங்கள்

மணக்க மணக்க இனிக்க இனிக்க சுவைக்க இனிப்பு வகைகள்:

சுவையான இனிப்பு வகைகள் தொகுப்பு:

கோதி தம்பிட்டு

 தேவையான பொருள்கள்: 

* கோதுமை மாவு - 1 கப்
 * வெல்லம் - 1 பெரிய துண்டு
 * கொப்பரைத் தேங்காய் - 1/2
* தண்ணீர் - தேவையான அளவு
* நெய் - தேவையான அளவு
* ஏலக்காய் - தேவையான அளவு
* முந்திரி - சிறிதளவு
 * உலர்திராட்சை - சிறிதளவு

 செய்முறை: 
 * வாணலியில் எண்ணெய் விடாமல் கோதுமை மாவைப் போட்டு லேசாக வறுக்கவும். பச்சை வாசனை போய் மாவு லேசாகப் பொன்னிறம் அடையும்வரை தொடர்ந்து கிளறுங்கள். அதன்பிறகு, அடுப்பை அணைத்துவிடலாம்
* வெல்லத்தை ஒன்றரை பங்கு தண்ணீரில் கரைத்துக் கொதிக்கவைக்கவும். வெல்லம் நன்றாகக் கரைந்தவுடன் தணலைச் சிறியதாக்கிவிடவும்
 * ஏலக்காயைப் பொடி செய்து வெல்லக் கரைசலில் சேர்க்கவும். தேவைப்பட்டால் முந்திரி, உலர் திராட்சை போன்றவற்றையும் சேர்க்கலாம்
 * கடைசியாக, வெல்லக் கரைசலில் வறுத்த கோதுமை மாவைச் சேர்க்கவேண்டும். மொத்தமாகக் கொட்டிவிடாமல் சிறிது சிறிதாகச் சேர்த்துக் கிளறவும், கட்டி தட்டிவிடாமல் நன்கு கெட்டியான மாவு பதத்தில் வரவேண்டும்
* இப்போது அடுப்பை அணைத்துவிடவும். மாவின் சூடு நன்றாகத் தணியும்வரை காத்திருக்கவேண்டும்
 * மாவு குளிர்ந்ததும், அதை லட்டு வடிவத்தில் பிடித்துவைக்கவேண்டும். தேவைப்பட்டால் கையில் கொஞ்சம் எண்ணெய் அல்லது நெய் தடவிக்கொள்ளலாம்
 * கோதி தம்பிட்டுகளின்மீது தேங்காய்த் துருவல், பாதாம் துண்டுகள் அல்லது உலர் திராட்சை ஒன்றை வைத்து அலங்கரித்துப் பரிமாறலாம்
* இதே செய்முறையில் கோதுமை மாவுக்குப் பதில் அரிசி மாவையும் பயன்படுத்தி தம்பிட்டு தயாரிக்கலாம்.


_________________________நன்றி___________________

ரவா உருண்டை:

 தேவையான பொருள்கள்:
* உப்புமா ரவை - 1 கப்
 * சர்க்கரை - 1 கப்
* முந்திரி (உடைத்தது) - 2 டேபிள் ஸ்பூன்
 * உலர்திராட்சை - 1 டேபிள் ஸ்பூன் * ஏலக்காய் - 1 டீ ஸ்பூன்
 * நெய் - தேவையான அளவு

 செய்முறை: 

* வெறும் வாணலியில் உப்புமா ரவையைப் போட்டு நன்கு வாசனை வரும்வரை, சிவப்பாக வறுத்து எடுக்கவும். முழுமையாக வறுக்காவிட்டால் பச்சை வாடை அடிக்கும்
 * அதே நேரம் இன்னொரு வாணலியில் எண்ணெய் இல்லாமல் ஏலக்காயை லேசாக வறுத்து ரவையில் கொட்டிவிடவும்
* ரவை, ஏலக்காய் இரண்டையும் மிக்ஸியில் கொட்டி நன்கு நைசான பொடியாக அரைத்துக்கொள்ளவும்
 * சர்க்கரையைத் தனியே இன்னொரு ஜாரில் போட்டு அதேபோல் நன்கு நைசாக அரைத்துக்கொள்ளவும்.
*வாணலியில் 3/4 கப் அல்லது அதற்குமேல் நெய் ஊற்றி நன்கு உருக்கவும்
 * இன்னொரு வாணலியில் சிறிது நெய் விட்டு உடைத்த முந்திரிப் பருப்பு, உலர்திராட்சை ஆகியவற்றைப் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்
* ஓர் அகன்ற பாத்திரத்தில் ரவை, சர்க்கரைத் தூள்களைக் கொட்டி நன்கு கிளறவும். அதில் உருகிய நெய்யைக் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றிப் பிசையவும். ஒரேயடியாக ஊற்றினால் கொழகொழ என்றாகிவிடும், சரியான பதம் என்பது, உருண்டைகள் சுலபமாகப் பிடிக்கும் பதம்தான்
* இப்போது இதனுடன் வறுத்த முந்திரி, திராட்சையைக் கொட்டிக் கிளறிவிடவும்
 * ரவை, சர்க்கரைக் கலவையை உருண்டை வடிவத்தில் பிடித்து வைத்துக் காற்றுப் புகாத டப்பாவில் பாதுகாக்கவும்
 * கூடுதல் சுவைக்காக, ரவா உண்டேயில் பால் பவுடர் சேர்ப்பது உண்டு. பாதமைத் தூளாகச் சீவிப் போட்டாலும் நன்றாக இருக்கும்.

______________________நன்றி______________________

சப்பக்கி( ஜவ்வரிசி ) பாயாசம்:

 தேவையான பொருள்கள்:

 * ஜவ்வரிசி - 1/2 கப்
 * பால் - 3/4 லிட்டர்
* சர்க்கரை - 1 கப்
* முந்திரி - 2 டேபிள் ஸ்பூன்
 * உலர்திராட்சை - 1 டேபிள் ஸ்பூன்
 * ஏலக்காய் - 4 * நெய் - 1 டீ ஸ்பூன்

 செய்முறை:

* வாணலியில் துளி நெய் விட்டு ஜவ்வரிசியை நன்கு பொன்னிறமாக வரும்வரை வறுத்துக்கொள்ளவும்
* அதே வாணலியில் ஒரு தம்ளர் தண்ணீர் விட்டு ஜவ்வரிசியை நன்கு வேகவிடவும்
 * ஜவ்வரிசி வெந்தவுடன் அதில் பாலை ஊற்றி, சர்க்கரையையும் சேர்த்து நன்றாகக் கொதிக்கவிடவும்
* பாயசம் ரொம்பக் கெட்டியாகாமல், லேசாகத் தளதளவென இருக்கும்போதே அடுப்பை அணைத்துவிடவும். ஜவ்வரிசி நீரை உறிஞ்சும் என்பதால், பாயசம் ஆற ஆற நன்கு கெட்டியாகிவிடும். அப்போது தேவைப்பட்டால் சூடான பாலைச் சேர்க்கலாம்
* வாணலியில் நெய் ஊற்றி முந்திரி, உலர்திராட்சை ஆகியவற்றைப் போட்டுப் பொன்னிறமாக வறுக்கவும். ஏலக்காயையும் பொடி செய்து சேர்க்கவும், விருப்பப்பட்டால் குங்குமப் பூவையும் பாலில் கரைத்துச் சேர்க்கலாம்
 * இந்தக் கலவையைப் பாயசத்தில் கொட்டிக் கிளறிப் பரிமாறவும். சூடாகவோ, ஜில்லென்றோ எப்படிச் சாப்பிட்டாலும் சுவை குறையாது


______________________நன்றி______________________


மட்டி

 தேவையான பொருள்கள்:

 * கொண்டைக் கடலை - 1 கப்
 * வெல்லம் - 1/2
 * தேங்காய் - 1/2 மூடி
* முந்திரிப் பருப்பு - 8
 * உலர் திராட்சை - 1 டேபிள் ஸ்பூன்
 * ஏலக்காய் - 6
* நெய் - தேவையான அளவு

 செய்முறை:

 * ஒரு கப் கொண்டைக் கடலையுடன் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வேகவிடவும். குருமாவுக்கு வேகவைப்பதுபோல் அது நன்றாகக் குழைந்து வரவேண்டும்
 * வெல்லத்தை நன்றாகப் பொடி செய்து வேக வைத்த கொண்டைக் கடலையுடன் சேர்க்கவும், அடுப்பை அணைக்கவேண்டாம் * ஒரு வாணலியில் சிறிது நெய் விட்டு, முந்திரிப் பருப்பை உடைத்துப் போடவும், அத்துடன் உலர் திராட்சைகளையும் சேர்த்து நன்றாகப் பொன்னிறமாக வறுக்கவும்
* தேங்காயைத் துருவி அரை கப் அளவில் எடுத்துக்கொள்ளவும். ஏலக்காயைப் பொடி செய்து ஒரு டீ ஸ்பூன் அளவில் எடுத்துக்கொள்ளவும்
* வறுத்த முந்திரிப் பருப்பு, உலர் திராட்சை, தேங்காய்த் துருவல், ஏலக்காய்ப் பொடி அனைத்தையும் கொண்டைக் கடலை, வெல்லக் கலவையில் கொட்டிக் கிளறவும்.
 * தேவையான அளவு நெய் சேர்க்கவும்
 * நன்கு மணம் வரும்போது அடுப்பை அணைத்துவிடவும், மட்டியைக் கிண்ணங்களுக்கு மாற்றிச் சூடாகப் பரிமாறவும்.

________________________நன்றி___________________

அரிசி பாயசம்

தேவையான பொருள்கள்:

பாஸ்மதி அரிசி - 1 கப்
வெல்லம் - 1
பால் - 1 லிட்டர்
தேங்காய் - 2
நெய் - 1/2 கப்
முந்திரிப் பருப்பு - சிறிதளவு
உலர் திராட்சை - சிறிதளவு

 செய்முறை:

 *  பாஸ்மதி அரிசியைப் பாலில் வேக வைத்துச் செய்வது இந்த ‘அரிசி பாயசம்’
 * வாய் அகன்ற பாத்திரம் ஒன்றில் பாலைக் கொட்டி, மிதமான தணலில் கொதிக்கவிடவும்
* சிறிது நேரம் கழித்து அதில் அரிசியைக் கொட்டிக் கிளறவும். சுமார் பத்து நிமிடங்களுக்குமேல் அரிசி பாலிலேயே வேகும்படி கலக்கிக்கொண்டிருக்கவேண்டும்
 * வெல்லத்தைத் தூளாக்கி, சுத்தப்படுத்தி, பாலில் கலந்து கிளறவும், சிறிது நெய்யும் சேர்க்கலாம்
* தேங்காயை உடைத்து, துருவி, அதிலிருந்து தேங்காய்ப் பால் பிழிந்து எடுத்துக்கொள்ளுங்கள்
 * வாணலியில் சிறிது நெய் ஊற்றி, அதில் முந்திரிப் பருப்புத் துண்டங்கள், உலர் திராட்சை இரண்டையும் போட்டு வதக்கவும். முந்திரி நன்றாகப் பொன்னிறமாக வரும்வரை தொடர்ந்து வறுக்கவேண்டும்.
இதற்குள் பாயசம் நன்றாக வெந்திருக்கும், அதில் தேங்காய்ப் பாலை ஊற்றிக் கிளறவும்
* சில நிமிடங்கள் கழித்து, அரிசி பாயசம் நல்ல பதத்தில் கெட்டிப்பட்டு வரும். அப்போது முந்திரிப் பருப்பு, உலர் திராட்சை இரண்டையும் அதில் கொட்டிக் கிளறிவிட்டு அடுப்பை அணைத்துவிடுங்கள்
* அரிசி பாயசத்தை உடனடியாகச் சூடாகப் பரிமாறலாம். ஒருவேளை மிஞ்சிவிட்டாலும், குளிர்பதனப் பெட்டியில் பாதுகாத்து வைத்துச் சாப்பிடலாம், அதுவும் ஒரு வித்தியாசமான சுவையாக இருக்கும்

____________________நன்றி____________________


கோதம்புப் பாயசம்:

தேவையான பொருள்கள்:

கோதுமை ரவை - 2 கப்
வெல்லம் - 1
தேங்காய் - 2
 நெய் - 1/4 கப்
ஏலக்காய் - 6
சீரகத் தூள் - சிறிதளவு
முந்திரிப் பருப்பு - சிறிதளவு
உலர் திராட்சை - சிறிதளவு

 செய்முறை:

* உடைத்த கோதுமை ரவையைப் பயன்படுத்திச் செய்யும் இந்தப் பாயசம், கேரளாவில் மிகவும் பிரபலமானது
 * இந்தப் பாயசத்துக்கு முக்கியமான தேவை, தேங்காய்ப் பால் - இரண்டு தேங்காய்களைத் துருவி கெட்டியாகவும், நீர்த்ததாகவும் பாலை மூன்று விதமாகத் தனித்தனியே பிரித்து எடுத்துவைத்துக்கொள்ளுங்கள்
* வாணலியில் சிறிதளவு நெய் விட்டு, கோதுமை ரவையை அதில் போட்டு நன்றாக வறுக்கவும், பின்னர் இதில் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும்
* வெல்லத்தை உடைத்துத் தூளாக்கி ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொள்ளவும்
* இதற்குள், அடுப்பில் வைத்த பாத்திரத்தில் நீர் வற்றி கோதுமை ரவை நன்றாகக் குழைந்த பதத்திற்கு
பதத்திற்கு வந்திருக்கும். இப்போது அதில் வெல்லத் தூள், நீர்த்த தேங்காய்ப் பால் ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறுங்கள்
 * பாயசம் நன்கு கொதித்தபிறகு, கெட்டியான தேங்காய்ப் பாலை அதில் ஊற்றிக் கலக்கவேண்டும், உடனே அடுப்பை அணைத்துவிடவேண்டும்
* இன்னொரு வாணலியில் சிறிதளவு நெய் விட்டு, உடைத்த முந்திரிப் பருப்புகள், உலர்ந்த திராட்சை, ஏலக்காய்த் தூள், சீரகத் தூள் ஆகியவற்றைப் போட்டு வறுக்கவும்
* முந்திரி பொன்னிறமாக வறுபட்டதும், இந்தக் கலவையைப் பாயசத்தில் கொட்டிக் கிளறவும். அடுப்பை அணைத்துவிடவும்.


____________________நன்றி___________________

இலை அடை:

தேவையான பொருள்கள்:

பலா சுளைகள் - 10 முதல் 15 (அளவைப் பொறுத்து)
வெல்லம் - 1/2
தேங்காய் - 1
 பச்சரிசி - 1 கப்
 புழுங்கல் அரிசி - 1 கப்
 நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
 வாழை இலைகள் - தேவைக்கு ஏற்ப
 உப்பு - தேவையான அளவு

 செய்முறை:

* பச்சரிசி, புழுங்கல் அரிசியைக் கலந்து ஒன்றாக ஊற வைக்கவும். அரிசியின் தன்மையைப் பொறுத்துக் குறைந்தபட்சம் மூன்று மணி நேரங்கள்வரை ஊறவேண்டியிருக்கும்
 * ஊறிய அரிசியில் தேவையான அளவு உப்பு சேர்த்து மாவாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்
 * வெல்லத்தைத் தூளாக இடித்து, தண்ணீர் சேர்த்து அடுப்பில் கொதிக்கவிடவும். கரைந்த வெல்லத்தை வடிகட்டிச் சுத்தப்படுத்தவும்
* பலா சுளைகளை விதை நீக்கி, சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்துக்கொள்ளவும், இதனை வெல்லக் கரைசலுடன் சேர்த்து அடுப்பில் ஏற்றிக் கொதிக்க விடுங்கள்
* தேங்காயைத் துருவி ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொள்ளுங்கள். பலாச் சுளை, வெல்லக் கரைசல் நன்கு பாகு பதத்தில் வரும்போது, அதில் தேங்காய்த் தேங்காய்த் துருவலை ஊற்றிக் கிளறவும். அடுப்பை அணைத்துவிடவும்
 * இப்போது இந்தப் பூரணத்தைப் பயன்படுத்தி இலை அடை தயாரிக்கப்போகிறோம். அதற்கு வாழை இலையைத் துண்டுகளாக நறுக்கி, லேசான தணலில் அல்லது வெயிலில் காட்டி எடுத்துக்கொள்ளவும்
 * இலையின்மீது அரிசி மாவை மெலிதாகத் தடவுங்கள். அதன்மீது ஒரு பிடி பூரணத்தை வைத்து, இலையை மடித்து ஓர் இட்லித் தட்டில் வைத்துவிடுங்கள்
 * இப்படியே எல்லா இலைகளிலும் அடை தயாரித்து முடித்ததும், அந்த இட்லித் தட்டை குக்கரில் வைத்து வெயிட் போடாமல் வேக விடுங்கள்
 * இலை அடை வெந்ததும், அப்படியே சூடாக எடுத்துப் பரிமாறலாம்.


____________________நன்றி____________________

தேங்காய்ப் புட்டு:

தேவையான பொருள்கள்:

புட்டு அரிசி - 2 கப்
தேங்காய் - 1
சர்க்கரை - 1 கப்
ஏலக்காய்த் தூள் - 1 டீ ஸ்பூன்
முந்திரி - தேவைக்கு ஏற்ப
உலர் திராட்சை - தேவைக்கு ஏற்ப
நெய் - தேவைக்கு ஏற்ப

 செய்முறை:

* புட்டு செய்வதற்காகவே விசேஷமான கேரள வகை அரிசி ஒன்று கடைகளில் கிடைக்கிறது. லேசான சிவப்பு வண்ணத்தில் இருக்கும் இந்த அரிசியைப் பார்த்துத் தேர்ந்தெடுத்து வாங்குங்கள்
 * இந்த அரிசியுடன் தண்ணீர் கலந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் அதனை நிழலில் உலர்த்தவேண்டும். இதையெல்லாம் புட்டு செய்வதற்கு முந்தின நாள் செய்து வைத்துக்கொண்டால் மிகவும் நல்லது
* அரிசி நன்றாக உலர்ந்தவுடன் மிக்ஸியில் போட்டு அரைக்கலாம். அளவு அதிகமாக இருந்தால் வெளியே அரவை இயந்திரங்களைப் பயன்படுத்தி அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்
 * இப்போது அதனை சலித்து எடுத்துவிட்டு, வாணலியில் எண்ணெய் இல்லாமல் குறைந்த தணலில் லேசாக வறுக்கவும், கோல மாவு பதத்தில் வரும்போது எடுத்துவிடுங்கள்
* வெதுவெதுப்பான தண்ணீரில் கொஞ்சம் உப்பு போட்டுக் கிளறி எடுத்துக்கொள்ளவும்.
* அரிசி மாவை ஓர் அகலமான பாத்திரத்தில் பரப்பிவிட்டு, இந்த உப்புத் தண்ணீரை அதில் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து பிசறவும். இப்போது மாவைக் கையில் பிடித்தால் நன்றாகப் பிடிக்க வரவேண்டும், அதேசமயம் கையை எடுத்துவிட்டால் உதிர்ந்து விழவேண்டும், அதுதான் சரியான பதம்
* பிசறிய அரிசி மாவு ஒருபக்கம் ஊறிக்கொண்டிருக்க, இன்னொரு பக்கம் தேங்காயை நன்கு துருவி எடுத்துக்கொள்ளுங்கள்
 * புட்டு செய்வதற்காகவே விசேஷக் குழல்கள் (புட்டு மேக்கர்) கிடைக்கின்றன. அவற்றின் அடியில் சிறிதளவு நெய் தடவி அதில் இந்த மாவைக் கொஞ்சம் போடவும், அதன்மீது தேங்காய்த் துருவல், மீண்டும் மாவு, மீண்டும் துருவல் என்று அடுக்கு அடுக்காக முக்கால் வாசிவரை நிரப்பவும்
 * இப்போது புட்டு மேக்கரை அடுப்பில் வைத்துச் சுடவைக்கவும். நான்கு பக்கமும் நன்றாக ஆவி வந்ததும் அடுப்பை அணைத்துவிடவும். ஆறியதும், புட்டை வெளியில் எடுப்பதற்கான குச்சியைப் பயன்படுத்தி அதனைத் தட்டில் போட்டு, நன்றாக உதிர்த்துவிடவும்
 * தேவைப்பட்டால் நெய்யில் முந்திரிப் பருப்பு, உலர் திராட்சை ஆகியவற்றைப் பொன்னிறமாக வறுத்து இதனுடன் சேர்த்துக் கலக்கலாம்
* இந்தப் புட்டுடன் காரக்கறி தொட்டுக்கொண்டு அப்படியே உட்கொள்ளலாம், அல்லது சர்க்கரை சேர்த்துக் கிளறி இனிப்பாகச் சாப்பிடலாம்
 * இதேமுறையில் அவல் புட்டு, ராகிப் புட்டு, கம்புப் புட்டு என்று பல வகைகள் உண்டு. இப்போதெல்லாம் கடைகளில் ’புட்டு மாவு’ என்று ரெடிமேடாகக்
கிடைக்கிறது. அதைப் பயன்படுத்தினால் சில நிமிடங்களில் புட்டு தயாராகிவிடும்.

_____________________நன்றி_________________

இடிச்சுப் பிழிஞ்ச பாயசம்:

தேவையான பொருள்கள்:

கடலைப் பருப்பு - 1 கப்
 தேங்காய் - 1
வெல்லம் - 1
 சர்க்கரை - 1/2 கப்
நெய் - 1/2 கப்

செய்முறை:

 * தேங்காய்ப் பால் பயன்படுத்துகிற பாலக்காட்டு உணவு வகைகள் பெரும்பாலானவற்றில், மூன்று வகையாக அதனைப் பிரிப்பார்கள் - கெட்டியான பால், ஓரளவு நீர்த்தது, மிகவும் நீர்த்தது.
முதலில் தயாரிக்கும் பால் மிகக் கெட்டியாக இருக்கும், பின்னர் தொடர்ந்து பிழிய, நீர்த்த பால் கிடைக்கும், இன்னும் பிழிந்தால் மிக நீர்த்ததாகக் கிடைக்கும். நம் வசதிக்காக இவற்றை முதல் பால், இரண்டாம் பால், மூன்றாம் பால் என்று குறிப்பிடலாம். இவற்றுள் மூன்றாம் வகைப் பாலில் அரிசி, பருப்பு அல்லது காய்கறிகளை வேக வைக்கலாம், மற்ற இரண்டும் உணவுப் பொருள்களைக் கெட்டியாகவும் சுவையாகவும் மாற்றப் பயன்படுகிறவை
 * இந்த மூன்று வகைத் தேங்காய்ப் பால்களையும் பயன்படுத்துகிற எந்தப் பாயசத்தையும் ‘இடிச்சுப் பிழிஞ்ச பாயசம்’ என்று குறிப்பிடலாம், இங்கே நாம் குறிப்பிட்டிருப்பது, கடலைப் பருப்பைப் பயன்படுத்தும் பாயச வகை, இதற்குப் பதிலாக அரிசியோ, கோதுமையோ, வாழைப் பழத்தையோ, வேறு பயறு வகைகளையோகூட நீங்கள் பயன்படுத்தலாம்.
* கடலைப் பருப்பை நன்றாகக் கழுவி, அதனுடன் மூன்றாம் வகைத் தேங்காய்ப் பாலைக் கலந்து வேக விடுங்கள்
* இந்த நேரத்தில், வெல்லத்தை உடைத்து, தண்ணீரில் கரைத்து, வடிகட்டிச் சுத்தப்படுத்திக்கொள்ளுங்கள். இதனை ஒரு பெரிய பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் ஏற்றவும்
* இதற்குள், கடலைப் பருப்பு வெந்திருக்கும், அதை லேசாகக் கிளறி வெல்லக் கரைசலில் ஊற்றிக் கொதிக்கவிடுங்கள், நன்றாகக் கொதித்ததும் நெய் சேர்த்துக் கலக்கவும்
* இப்போது இரண்டாம் வகைத் தேங்காய்ப் பாலைச் சேர்த்து இன்னும் சில நிமிடங்கள் கொதிக்கவிடவும், கடைசியாக கெட்டியான முதல் வகைத் தேங்காய்ப் பாலை ஊற்றிக் கிளறி, உடனே அடுப்பை அணைத்துவிடுங்கள்
* விருப்பமிருந்தால் முந்திரி, உலர் திராட்சையைப் பொன்னிறமாக வறுத்துப் போட்டு அலங்கரித்துப் பரிமாறவும்

______________________நன்றி_________________

Nongu juice how to prepare palmyra shake at home?

நொங்கு சர்பத்:

செய்ய தேவையான பொருட்கள்:
நொங்கு - 3
சீனி - 2 மே.க
பால் - 300 மில்லி
ஜஸ் கட்டி - 2
ரோஸ் எஸன்ஸ் - 15 மில்லி
( ரோஸ் எஸன்ஸ் உங்களுக்கு தேவையான
அளவு சேர்த்து கொள்ளலாம்)
 செய்முறை:
1) தோல் நீக்கி நொங்கை சுத்தம் செய்து கொள்ளவும்.
2) பால் பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தவும்.
3) மிக்ஸியில் சீனி, ஐஸ்கட்டி,நொங்கு,ரோஸ் எஸன்ஸ் மற்றும் பால் ஊற்றி 2 நிமிடம்
அரைத்து கொள்ளவும்.
சுவையான நொங்கு சர்பத் தயார் !!!
இந்த கோடைகாலத்தில் அவசியம் சாப்பிட வேண்டிய ஒன்று நொங்கு.. நொங்கு பல நன்மைகளை நமக்கு தருகிறது.

Wednesday, March 20, 2019

TRADITIONAL INDIAN RECIPE


முடக்கத்தான் கலி


  • எலும்புகளை வலுவூட்டக்கூடியது. 
  • மூட்டு வலியை நீக்கக்கூடியது.
  • பெண்களின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

சுரைக்காய் புடி

சுரைக்காய் புடி

பாரம்பரிய, எளிமையான, ஆரோக்கியமான, மிகவும் சுவையான உணவு....!!!





Top kitchen items to buy

HEALTHY BREAKFAST FOR DIABETIC PATIENTS



HEALTHY BREAKFAST


Very simple,quick and easy to prepare but more healthy and tasty. Watch this video to learn this recipe and try at your home.. Comment and share your opinion...